Home celebrities டண்டானா டர்னா பாட்டுக்கு ஆடும் போது நான் கர்ப்பம்: மாளவிகா ஓபன் டாக்!

டண்டானா டர்னா பாட்டுக்கு ஆடும் போது நான் கர்ப்பம்: மாளவிகா ஓபன் டாக்!

236
0

குருவி பட த்தில் வரும் டண்டானா டர்னா பாட்டுக்கு நான் ஆடும் போது 2 மாதம் கர்ப்பமாக இருந்தேன் என்று நடிகை மாளவிகா ஓபனாக பேசியுள்ளார்.

தல அஜித் நடிப்பில் வந்த உன்னை தேடி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மாளவிகா. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பரிக்க வருகிறோம், கந்தா கடம்பா கதிர்வேலா, வெற்றிக்கொடிகட்டு, சீனு, லவ்லி, பேரழகன், வசூல் ராஜா எம்பிபிஎஸ், ஐயா, சந்திரமுகி, திருமகன், சபரி, மணிகண்டா, கட்டுவீரியன், நான் அவனில்லை என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ஒரு சில படங்களில் குத்தாட்டமும் போட்டுள்ளார். அப்படி அவரது ஆடிய பாடலான வாழ மீனுக்கு என்ற பாடலில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது தமிழ் சினிமாவின் அனுபவம் குறித்து பேசியுள்ளார். அப்போது, தளபதி விஜய் நடிப்பில் வந்த குருவி பட த்தில் தான் நடனம் ஆடிய டண்டானா டர்னா பாடல் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறியிருப்பதாவது: விஜய்யுடன் டான்ஸ் ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்பை தவற விடக் கூடாது என்பதற்காக 2 மாதமாக கர்ப்பமாக இருந்தாலும் பரவாயில்லை என்று டண்டானா டர்னா பாடலுக்கு நடனம் ஆடினேன். எளிமையான ஸ்டெப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்று நான் ஆடினேன். ஆனால், என்னால் நன்றாக ஆட முடியவில்லை என்ற வருத்தம் இன்னமும் இருக்கிறது. நான் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால் நன்றாக டான்ஸ் ஆடியிருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சுமேஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிட த்தக்கது.

Previous articleகடவுளின் அருளால் குணமடைந்தேன்: அம்மு அபிராமி ஹேப்பி அண்ணாச்சி!
Next articleவடிவேலுவின் கெணத்த காணோம் போலீஸ் நெல்லை சிவா காலமானார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here