Home celebrities Vikram Upcoming Movie: கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் மலையாள நடிகர்!

Vikram Upcoming Movie: கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் மலையாள நடிகர்!

475
0

கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பகத் பாசிலைத் தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

கார்த்தி நடிப்பில் வந்த கைதி படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து தளபதி விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்த து. அப்படி வெளியான படம் தான் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது. என்னதான் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் வெளியாகியிருந்தாலும் மாஸ்டர் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படமாக திகழ்ந்தது. அதோடு பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – கமல் ஹாசன் உடன் கூட்டணி சேர்ந்தார். இவர்களது கூட்டணியில் விக்ரம் படம் உருவாகி வருகிறது. கமல் ஹாசனின் 66 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் பட த்தின் டைட்டில் டீசர் வெளியானது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமே இந்தப் படத்தை தயாரிக்கிறது. மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய ரோலில் நடிக்கிறார். விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக முதலில் ராகவா லாரன்ஸ் பெயர் அடிபட்டது. ஆனால், அது உண்மையில்லை என்று தெரிந்த நிலையில், விஜய் சேதுபதி தான் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.

தற்போது அது உண்மையாகியுள்ளது. விஜய்யைத் தொடர்ந்து கமல் ஹாசனுக்கும் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளார். விரைவில் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பகத் பாசிலைத் தொடர்ந்து மற்றொரு மலையாள நடிகர் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். ஆம், ஆண்டனி வர்கீஸ் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக மாஸ்டர் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleMadurai Muthu Covid 19 Vaccine: தடுப்பூசி போட்டுக் கொண்ட குக் வித் கோமாளி 2 மதுரை முத்து!
Next articleSuriya: IMDBன் டாப் 1000 படங்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்த சூர்யாவின் சூரரைப் போற்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here