கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் ஜூன் 7 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, நகுல், காளிதாஸ் ஜெயராம் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
என்னதான் பிரபலங்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும், பொதுமக்கள் பலரும் அதனை அலட்சியமாக நினைக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சமீபகாலமாக நான் வேதனையான விஷயங்களை கேள்வி படுகிறேன்.
யாருமே சரியா தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்ததுக்கு அப்புறம் நமக்கு நாமே டாக்டர். அக்கம் பக்கம், நண்பர்கள் என்று அனைவருமே டாக்டர் தான். டாக்டருக்கு படித்தவர்கள் தான் டாக்டராக இருக்க முடியும். தடுப்பூசி குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்களுக்கு தெரிந்த டாக்டரிம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி இருக்கிறது என்றால் டாக்டர்கள் சொல்வார்கள். நம்ம பாடியெல்லாம் ஸ்டீல் பாடி. நமக்கு எதுவும் வராது என்று சொல்லும் காலம் கிடையாது.
நம்மைவிட டாக்டர்களுக்கு வைத்தியத்துறையில் விஷயம் தெரியும். நான் சொல்வதையும் கேட்க வேண்டாம். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினியைக் கொண்டு சுத்தம் செய்வது என்று எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால், தடுப்பூசி மட்டும் போட்டுக்கொள்ள விரும்புவதில்லை. தயவுசெய்து டாக்டர்களின் அறிவுரைபடி தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நன்றி வணக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram