Home celebrities Thala Ajith: இன்னும் 3 நாள் ஷூட் தான் இருக்கு: வலிமை அப்டேட்!

Thala Ajith: இன்னும் 3 நாள் ஷூட் தான் இருக்கு: வலிமை அப்டேட்!

1055
0

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் 3 நாட்கள் ஷூட்டிங் தான் படமாக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் அஜித் குமார் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் வலிமை. டைட்டிலுக்கு ஏற்ப, ஆக்‌ஷன் காட்சிகளை அதுவும் போலீஸ் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அஜித்துடன் இணைந்து ஹூமா குரேஸி, சுமித்ரா, யோகி பாபு, குக் வித் கோமாளி பிரபலம் புகழ், கார்த்திகேயா கும்மகோண்டா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் சிபிசிஐடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் வலிமை படம் படமாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடந்து வந்த வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிட்ட த்தட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், ஒரேயொரு பைக் ஸ்டண்ட் காட்சி மட்டுமே எஞ்சியிருந்தது. இந்த ஸ்டண்ட் காட்சிக்காக படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் கொரோனா லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்னும் 3 நாட்கள் படப்பிடிப்பு மட்டும் எஞ்சியிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதில் ஒரேயொரு ஸ்டண்ட் சீன் மட்டும் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு, இந்தப் படத்தில் மொத்தம் 5 ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து, படம் ஆரம்பிக்கும் போது படத்தில் சீனியர் ஆர்ட்டிஸ்டை வைத்து படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆனால், கொரோனா தாக்கம் இந்தியாவில் பாதிப்பு ஏற்படுத்தி வந்த நிலையில், சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் படப்பிடிப்புக்கு வருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக மீண்டும் வேறு நடிகர், நடிகைகளை கொண்டு படப்பிடிப்பு நடந்துள்ளது என்று இயக்குநர் ஹெச் வினோத் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை பட த்தை வெளியிட படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே வலிமை பட த்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டுள்ளது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தான் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. படமும் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்று தெரிகிறது.

Previous articleKhushbhu: அண்ணாத்த படத்தை முடிக்க பிளான் போட்ட குஷ்பு!
Next articleKamal Haasan: கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் தேசிய விருது ஸ்டண்ட் மாஸ்டர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here