டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் (Chellamma Song in Doctor) யுடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் மார்ச், 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
கோடை விடுமுறையில் ‘டாக்டர்’ படம் நெட்பிலிக்ஸ்-ல் வெளியாக உள்ளது. சேட்டிலைட்ஸ் உரிமையை சன்டிவியும், டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை நெட்பிலிக்ஸ்-ம் வாங்கியுள்ளன.
இந்நிலையில், டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா பாடல் வீடியோ 100 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
செல்லம்மா பாடலை எழுதியவர் சிவகார்த்திகேயன். அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து செல்லம்மா பாடலை பாடியுள்ளனர்.