This post is also available in: English (English)
மாஸ்டர் படம் வெளியாகி 30-வது நாளை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ராக்கி திரையங்கிற்கு சென்று ரசிகர்களுடன் கண்டுகளித்தார்.
மாஸ்டர் படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகியது. படம் வெளியாகி 15 நாட்களிலேயே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியது.
இருப்பினும் இன்னும் பல திரையரங்கில் 30-வது நாளைக் கடந்து மாஸ்டர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
30-வது நாள் அன்று ராக்கி திரையரங்கிற்கு சென்ற லோகேஷ் கனகராஜ், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளார். இந்த வீடியோவை அந்த திரையரங்கம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
வீடியோவில், திரையரங்கத்திற்கு வந்த ரசிகர்கள் மற்றும் குடுபத்தினருக்கு நன்றி தெரிவித்ததுடன், நானும் உங்களுடன் அமர்ந்து முழுப்படத்தையும் பார்க்கப்போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.