கொரோனா லாக்டவுன் முடிந்த உடன் முதல் படமாக சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.
முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சந்தானம். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். தனது படத்தையே காமெடியாக கொடுத்தார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பட த்தின் மூலமாக ஹீரோவாக அவதாரம் எடுத்தார். வரிசையாக, இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, A1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா முதல் அலையின் போது மூடப்பட்டிருந்த திரையரங்குகள் திறந்த பிறகு பிஸ்கோத் படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, சந்தானம் பாடகராக நடித்திருந்த பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தா வலி மாமே வலீப், புளி மாங்கா புலீப் என்ற பாடல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தப் பட த்தைத் தொடர்ந்து தற்போது டிக்கிலோனா பட த்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கியுள்ள இந்தப் படம் சைன்ஸ் பிக்ஷன் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. டிக்கிலோனா பட த்தில் சந்தானத்துடன் இணைந்து அனாகா, ஷிரின் காஞ்ச்வாலா, ஹர்பஜன் சிங், யோகி பாபு (டிக்கிலோனா – விஞ்ஞானி – சைன்டிஸ்ட்), ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், முனீஷ்காந்த், ஷா ரா, அருண் அலெக்சாண்டர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
டிக்கிலோனா படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த து. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக பட த்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட து. தற்போது மீண்டும் தாண்டவம் ஆட தொடங்கியுள்ள கொரோனா 2ஆவது அலையின் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டால் திரைக்கு வரும் முதல் படமாக டிக்கிலோனா இருக்கும் என்று புதிதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விளைவாக டுவிட்டரில், #Dikkiloona என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. எனினும் இது குறித்து படக்குழுவினர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.