Home Celebrities இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ? கொரோனாவுக்கு அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா...

இன்னும் எத்தனை பேர காவு வாங்க போகுதோ? கொரோனாவுக்கு அசுரன் பட நடிகர் நிதிஷ் வீரா பலி!

194
0

அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய கொரோனா மீண்டும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலை காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதோடு, பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக கொரோனாவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பலியாகி வருகின்றனர். கொரோனாவுக்கு பலியானவர்களில் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே வி ஆனந்தும் ஒருவர். கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரைத் தொடர்ந்து, இயக்குநர் தாமிரா, நடிகர் பாண்டு, டிகேஎஸ் நடராஜன், நெல்லை சிவா, நடிகர் மணிமாறன், ஆட்டோகிராஃப் கோமகன், தாதா87 பட தயாரிப்பாளர் கலைச் செல்வன், நடிகரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா என்று பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர். இந்த நிலையில், தற்போது நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார்.

விஜயகாந்த் நடிப்பில் வந்த வல்லரசு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிதிஷ் வீரா. இந்தப் பட த்தைத் தொடர்ந்து புதுப்பேட்டை, பேரரசு, வெண்ணிலா கபடிக் குழு, சிந்தனை செய், நேற்று இன்று, படை வீரன், காலா, பேரன்பு, ஐரா, நீயா 2, ராட்சசி, வெண்ணிலா கபடிக் குழு 2, அசுரன், எட்டுத்திக்கும் பற ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. நீரோ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் நிதிஷ் வீரா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here