ரஜினியை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று எனது தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும் என்று பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு திரைக்கு வந்த நேரம் படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு 2 வருடங்களுக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரேம் படத்தை கொடுத்தார். இந்தப் படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என்று பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படியும், வியக்கும் படியாகவும் இருந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது. பிரேமம் படத்திற்குப் பிறகு 5 ஆண்டுகள் வரை எந்த அறிவிப்பும் அறிவிக்காமல் இருந்தால். கடந்த ஆண்டு தனது அடுத்தபடம் குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, அந்தப் படத்திற்கு பாட்டு என்றும் டைட்டில் வைத்தார். பாட்டு படத்தில் பகத பாசில் மற்றும் நயன் தாரா ஆகியோர் முன்னணி ரோலில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், அல்போன்ஸ் புத்திரனின் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர் ஒருவர் ரஜினியை வைத்து படம் இயக்குவதற்கு கதை வைத்திருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன் கூறியிருப்பதாவது:
ரஜினி சாருக்கு கதை வைத்திருக்கிறேன். எனது பிரேமம் பட த்திற்குப் பிறகு அவரை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை.
ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்று எனது தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும். நாம் பாதி வேலை செய்தால், மீதி வேலையை கடவுள் பார்த்துக் கொள்வார். தற்போது கொரோனாவை அழிப்பதிலேயே கடவுள் பிஸியாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். கொரோனா அழிவு முடியட்டும் அதன் பிறகு முயற்சித்து பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.