பாலிவுட் படமான பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூர் பகுதியில நடக்க இருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான காமெடி படம் பதாய் ஹோ. முழுக்க முழுக்க காமெடி கதையை மையப்படுத்தி கிட்டத்தட்ட ரூ.29 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.220 கோடி வரையில் வசூலை அள்ளி குவித்தது.
பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக்கை நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்க திட்டமிருந்தார். அதோடு, இந்தப் படத்திற்கு வீட்டுல விசேஷங்க என்றும் டைட்டில் முடிவு செய்யப்ப்பட்டுள்ளதாகவும், இது குறித்து இயக்குநரும், நடிகருமான கே பாக்யராஜிடம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில், பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் கோயம்புத்தூர் பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது. அதோடு, ஒரே கட்டமாக படப்பிடிப்பு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. தற்போது நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக திரையரங்குகளும், படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று முற்றிலும் கட்டுக்குள் வந்த பிறகு பதாய் ஹோ படத்தின் தமிழ் ரீமேக் படமாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்த து. இந்தப் படத்தின் நயன்தாரா தான் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.