Home Celebrities Suriya: IMDBன் டாப் 1000 படங்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்த சூர்யாவின் சூரரைப் போற்று!

Suriya: IMDBன் டாப் 1000 படங்களின் பட்டியலில் 3ஆவது இடம் பிடித்த சூர்யாவின் சூரரைப் போற்று!

147
0

IMDB (Internet Movie Data Base) என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள 1000 படங்களின் பட்டியலில் சூர்யா நடிப்பில் வந்த சூரரைப் போற்று படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது.

பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் ஆகியோர் பலரது நடிப்பில் கடந்தாண்டு நவம்பர் 12 ஆம் தேதி வெளியான படம் சூரரைப் போற்று. கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகளில் வெளியாவதற்குப் பதிலாக நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. எனினும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தேசிய விருதுக்கும் தகுதி பெற்றது. ஆனால், கடைசி நேரத்தில் இந்தப் பட த்திற்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், IMDB (Internet Movie Data Base) என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ள 1000 படங்களின் பட்டியலில் சூர்யா நடிப்பில் வந்த சூரரைப் போற்று படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது. முதல் இடத்தில் தி ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் என்ற படமும், அடுத்த இடத்தில் தி காட்பாதர் என்ற படமும் இடம் பெற்றுள்ளது.

ஆனால், சூரரைப் போற்று படம் பட்டியலில் 9.1 ரேட்டிங்க் பெற்று 3ஆவது இடம் பிடித்துள்ளது. வேறு எந்தப் படமும் முதல் 50 இடம் கூட வரவில்லை. மாறாக விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் வந்த விக்ரம் வேதா படம் பட்டியலில் 8.3 ரேட்டிங் பெற்று 58ஆவது இடம் பிடித்துள்ளது. 60ஆவது இடத்தில் அமீர்கான் நடித்த தங்கல் படம் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் சூரரைப் போற்று படம் திரையிடப்படுகிறது. தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல், பாண்டிராஜ் படம், நவரசம் என்ற வெப் சீரிஸ், டிஜே ஞானவேல் படம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here