Home Celebrities DMDK Leader: நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கு: தேமுதிக!

DMDK Leader: நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கு: தேமுதிக!

265
0

மூச்சுத்திணறல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை மணப்பாக்கம் பகுதியிலுள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், உண்மையில், அவர் மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விஜயகாந்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடல்நிலை சீராகவே இருக்கிறது என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறியதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here