ஹீரோ படத்தில் நடித்துள்ள நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர்,விக்னேஷ் சிவன், நயன்தாரா என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அந்த வகையில், ஹீரோ பட த்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: ஆரோக்கிய சேது ஆப் மூலமாக நான் முயற்சித்தேன். ஆனால், எனக்கு அது சரியாக ஒர்க் ஆகவில்லை. அதன் பின் கோவின் ஆப் மூலமாக முயற்சித்தேன். அதில், 3 ஸ்லாட் மட்டுமே காலியாக இருந்தது. இதே போன்று U45 என்ற ஆப் டெலகிராம் ஆப் மூலமாகவும் முயற்சித்தேன். அது, எங்கெல்லாம் தடுப்பூசி கிடைக்குமோ அங்குள்ள பகுதிகளை காட்டியது.
இதையடுத்து, முதல் தடுப்பூசிக்கான அனுமதியை பெற்று, தடுப்பூசியும் செலுத்திக் கொண்டேன். அப்போது எனக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என்று கேட்டார்கள். என்னுடைய ஆதார் எண்ணையும் சோதனை செய்தார்கள். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின், கிட்டத்தட்ட 20 முதல் 30 நிமிடம் வரை காத்திருக்க செய்தார்கள். எனக்கு லேசான வலி மற்றும் காய்ச்சல் இருப்பது போன்று தெரிந்தது.
என்னுடைய அப்பாவை தடுப்பூசியை புகைப்படம் எடுக்கச் சொன்னேன். ஆனால், அதற்கு அவர்கள் அனுமதி வழங்கவில்லை. 2ஆவது தடுப்பூசி எப்போது செலுத்த வேண்டும் என்பதற்கான கார்டை என்னிடம் கொடுத்தார்கள். அதன்படி, வரும் ஜூன் 12 ஆம் தேதி 2ஆவது தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்திலும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். விரைவில், இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
View this post on Instagram