Home Celebrities ஊசின்னா ரொம்ப பயம்: தடுப்பூசி போட்டுக்கிட்ட குக் வித் கோமாளி 2 பவித்ரா லட்சுமி!

ஊசின்னா ரொம்ப பயம்: தடுப்பூசி போட்டுக்கிட்ட குக் வித் கோமாளி 2 பவித்ரா லட்சுமி!

144
0

ஊசிக்கு பயப்பட்டாலும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை தற்போது மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உருமாறி வந்த கொரோனாவின் 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணைக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனினும், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அதோடு, தமிழகத்தில் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி காயத்ரி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, எம் எஸ் பாஸ்கர் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நேற்று முன் தினம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை பவித்ரா லட்சுமி தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: எனக்கு ஊசி என்றாலே ரொம்பவே பயம். அப்படியிருந்தும், எனது முதல் தடுப்பூசியை நான் போட்டுக் கொண்டேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here