பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி என்ற டிடி தனது முதல் தடுப்பூசியை இன்று போட்டு கொண்டுள்ளார்.
கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் வரும் 24 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
To get vaccinated or no was a big doubt for me like all of YOU,as I was also taking meds 4 auto immune condition,but my doctor told me that’s the only way forward to save ourselves from the 3rd wave,so stopped my ongoing meds n took covishield..pls consult ur doc only,to decide pic.twitter.com/16uGzGocjw
— DD Neelakandan (@DhivyaDharshini) May 21, 2021
ரஜினிகாந்த், அருண் விஜய், சிம்ரன், காயத்ரி, கல்யாணி பிரியதர்ஷன், வேல்முருகன், கௌதம் கார்த்திக், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா பாண்டியன் என்று பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் திவ்யதர்ஷினி என்ற டிடி இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ரொம்ப யோசிச்சேன். பயந்தேன். ஏனா வேற மெடிசன்ஸ் கூட எடுக்குறேன். ஆம், நோய் எதிர்ப்பு சக்திக்காக வேற மெடிசன்ஸ் எடுக்குறேன். அதனால், டாக்டர்கிட்ட கேட்டேன், அவர் சொன்னாரு, மற்ற மெடிசன்களை இப்போதைக்கு எடுக்க வேண்டாம். இப்போது ரொம்ப முக்கியம் தடுப்பூசி. அது மட்டும் தான் நம்மள கொரோனால இருந்து காப்பாத்த முடியும். நம்மை, நம் குழந்தைகளை எல்லாம் கொரோனா 3ஆவது அலையிலிருந்து காப்பாற்ற முடியும்.
அதனால், கோவிஷீல்டு போட்டு கொண்டேன். எனக்கு முறையான ஆலோசனை வழங்கி எனது சந்தேகங்களை தீர்த்து வைத்த மருத்துவர் கார்த்திகா கார்த்திக்கிற்கு நன்றி. உங்களது டாக்டர்கிட்ட கேட்டு நல்ல முடிவு எடுங்கள். நமது அரசு மற்றும் மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை கேளுங்கள். இந்த 3ஆவது போட்டோவில் இருக்கும் செவிலியர் காயத்ரி எனக்கு வலிக்காமல் சிரித்துக்கொண்டே தடுப்பூசி போட்டுவிட்டாங்க. ஃபைசல், ரவி உள்பட மற்ற அனைத்து மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram