Home Celebrities MOST DESIRABLE WOMEN ON TELEVISION 2020 பட்டியலில் ரம்யா பாண்டியன் நம்பர் 1 இடம்!

MOST DESIRABLE WOMEN ON TELEVISION 2020 பட்டியலில் ரம்யா பாண்டியன் நம்பர் 1 இடம்!

226
0

2020 ஆம் ஆண்டுகளில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளின் பட்டியலில் ரம்யா பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான அதிகம் விரும்பப்பட்ட 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் நடிகை ரம்யா பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார். பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிபிரியன் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த டம்மி டபாசு படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஜோக்கர் படத்தில் நடித்தார். இந்தப் படம் தேசிய விருது பெற்றது. தொடர்ந்து, ஆண் தேவதை பட த்திலும் நடித்துள்ளார். தற்போது வாணி போஜன் நடிக்கும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படங்களில் நடிப்பதோடு, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் 2ஆவது இடம் பெற்றார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு கலக்கப் போவது யாரு சீசன் 9 நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார். இதே போன்று பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் கலந்து கொண்டு 3 ஆவது இடம் பிடித்தார்.

இப்படி அடுத்தடுத்த நிகழ்ச்சிகளின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ரம்யா பாண்டியன் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளின் பட்டியலில் ரம்யா பாண்டியன் முதலிடம் பிடித்துள்ளார்.

  1. ரோஷினி ஹரிபிரியன்
  2. பவித்ரா லட்சுமி
  3. நக்‌ஷத்ரா நாகேஷ்
  4. ஆயிஷா
  5. ஷிவானி நாராயணன்
  6. ஆல்யா மானஷா
  7. டிடி திவ்யதர்ஷினி
  8. கிகி கீர்த்தி
  9. சாந்தினி தமிழரசன்
  10. அஞ்சனா ரங்கன்
  11. சைத்ரா ரெட்டி
  12. பிரியங்கா குமார்
  13. வித்யா பிரதீப்
  14. ஆஷா கௌடா
  15. ஷபானா ஷாஜகான்
  16. டெல்னா டேவிஸ்
  17. ஷ்ரேயா அஞ்சன்
  18. சம்யுக்தா
  19. ஹீமா பிந்து

என்று வரிசையாக பிரபலங்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here