தேனியில் உள்ள தனது வீட்டிலேயே வைத்து இயக்குநர் இமயம் பாரதிராஜா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா நேற்று தனது முதல் தடுப்பூசி கோவிஷீல்டு போட்டுக் கொண்டுள்ளார்.
தேனி என் ஆர் டி நகர் பகுதியில் வசித்து வரும் பாரதிராஜாவின் இல்லத்திற்கு தேனி – அல்லிநகரம் நகராட்சி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சென்று இயக்குநர் பாரதிராஜாவுக்கு கோவிஷீல்டு முதல் தடுப்பூசி போட்டுள்ளனர். இதையடுத்து, 84 ஆவது நாளில் 2ஆவது தடுப்பூசி போடப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
vaccinated #StayHomeStaySafe pic.twitter.com/Z9Ml1j3PxP
— Bharathiraja (@offBharathiraja) May 26, 2021