சில வாரங்களாகவே பயம் இருந்தது என்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகை ஷெரின் ஓபனாக தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காரணமாக பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த வரும் 31 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த 1 ஆம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, ரஜினிகாந்த், ரம்யா பாண்டியன், அருண் விஜய், சிம்ரன், சூரி, எம் எஸ் பாஸ்கர், அசோக் செல்வன், கீர்த்தி சுரேஷ், பவித்ரா லட்சுமி, காயத்ரி, கௌதம் கார்த்திக், வேல்முருகன், சாந்தனு, கீர்த்தி சாந்தனு, ரித்விகா, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஹரிஷ் கல்யாண், விஜே அஞ்சனா, கல்யாணி பிரியதர்ஷன், இயக்குநர் பாரதிராஜா என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இவர்கள் வரிசையில் பிக்பாஸ் ஷெரினும் இணைந்துள்ளார். ஆம், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு சில வாரங்களாகவே நான் பயந்து கொண்டு இருந்தேன். எனக்கு அறிமுகமில்லாத மருந்துகள் குறித்து பயம் இருக்கிறது. அதோடு, அலர்ஜியும் இருக்கிறது. இதையடுத்து, எனது மருத்துவரிடம் நான் பேசினேன். இறுதியாக இப்போது கொரோனா முதல் தடுப்பூசி கோவிஷீல்டு எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram