Home Celebrities PSBB School: பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: விஷால்!

PSBB School: பத்மா சேஷாத்ரி பள்ளி மூடப்பட வேண்டும்: விஷால்!

200
0

பத்மா சேஷாத்ரி பள்ளியை மூட வேண்டும் என்றும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தூக்கிலிட வேண்டும் என்றும் நடிகை விஷால் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை கேகே நகர் பகுதியில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விஷாலும் தற்போது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலைகுனிய வைக்கிறது. அதோடு, அந்தப் பள்ளியை மூட வேண்டும் என்பதையும் உணர வைக்கிறது. இதுவரை யாரும், பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களிடம் ஒருமுறை கூட மன்னிப்பு கேட்கவில்லை.

இனிமேல், இது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது நண்பர் அமைச்சர் அன்பில் மகேஷை கேட்டுக் கொள்கிறேன். ஆனால், இந்த சம்பவத்தை யாரும் சாதி பிரச்சனையாக்குவது கூடாது. இது இழிவானது. மாணவிகளுக்கு தொல்லை கொடுத்தவரை தூக்கில் போட வேண்டும். இப்போதாவது, பெற்றோர்களிடமும், மாணவிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here