Home Celebrities Gayathri Raghuram: விஷால் பல பெண்களை சூறையாடியிருக்கிறார்: காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு!

Gayathri Raghuram: விஷால் பல பெண்களை சூறையாடியிருக்கிறார்: காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு!

267
0

விஷாலால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் மீது ஏற்கனவே நடிகை ஸ்ரீ ரெட்டி பாலியல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகையும், பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம், விஷால் மீது பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். இது குறித்து காயத்ரி ரகுராம் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சினிமா துறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள், வேட்டையாடுபவர்கள் யார் என்றால் அது விஷால் தான். அவரைத்தான் நான் முதலில் கண்டிக்கிறேன். சினிமாவில் அறிமுகமாகும் பெண்களுக்கும், முன்னணி நடிகைகளுக்கும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் கொடுத்திருக்கிறார். பல பெண்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு உதவி தேவைப்படுகின்ற பொழுது முதலில் வீரத்தை காட்டியிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக விஷால் வேறு ஒன்றை கையாண்டு பெண்களை சூறையாடியிருக்கிறார். விஷாலின் கேவலமான அணுகுமுறையால் பெண்கள் பலரும் அலறியடித்துக் கொண்டு ஓடுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக சென்னை கேகே நகர் பள்ளியில் நடந்த ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக, பள்ளியை மூட வேண்டும் என்றும், பாலியல் தொல்லை கொடுத்தவரை தூக்கிலிட வேண்டும் என்றும் விஷால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here