விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் எஃப்.ஐ.ஆர். படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். த்ரில்லர், ரொமாண்டிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவான காடன் படம் வெளியாகியிருந்த து. இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ஆரண்யா, எஃப் ஐ ஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் எஃப் ஐ ஆர் படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கௌதம் மேனன், கௌரவ் நாராயணன், பிரசாந்த் ரங்கசாமி ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அஸ்வத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா 2ஆவது அலையின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், புதிய படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதோடு, சிறிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் நேரடியாக ஓடிடி பக்கம் சென்றுள்ளது. அந்த வகையில், விஷ்ணு விஷாலின் எஃப் ஐ ஆர் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக அரவிந்த் சாமி நடிப்பில் உருவான நரகாசூரன் படம் நேரடியாக சோனி லைவ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்தது என்பது குறிப்பிட த்தக்கது.