Home Celebrities 100 குடும்பங்களுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை பொருட்கள்: பூஜா ஹெக்டே!

100 குடும்பங்களுக்கு ஒரு மாசத்துக்கு தேவையான மளிகை பொருட்கள்: பூஜா ஹெக்டே!

247
0

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி65 படத்தின் நடிகை பூஜா ஹெக்டே, 100 குடும்பங்களுக்கு ஒரு மாசத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்க இருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தற்போது மீண்டும் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா 2ஆவது அலையின் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 31 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்ட து. அதன் பிறகு மீண்டும் ஒரு வாரம் வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது தளர்வுகளின்றி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று செய்திகள் வெளியாகி வருகிறது. கொரோனா லாக்டவுன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு உதவும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் பலரும் உதவி வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது தளபதி65 படத்தில் நடிக்கும் நடிகை பூஜா ஹெக்டே 100 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப் பொருட்களை வழங்க இருக்கிறார். மக்களுக்கு கொடுக்கும் உணவு பொருட்களுடன் பூஜா ஹெக்டே இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகி வருகிறது.

கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த முகமூடி பட த்தின் மூலமாக சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படம் போதுமான வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் அதுவும் விஜய் படத்தில் இணைந்துள்ளார். ஜார்ஜியாவில் நடந்து முடிந்த முதல்கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ளவில்லை. சென்னையில் தொடங்க இருக்கும் 2ஆவது கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here