தனது முதல் கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தொற்றுக்கு எதிரான சிறந்த பந்தயம் தடுப்பூசி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட் சுபா என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த், பவித்ரா லட்சுமி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, வேல்முருகன், ரித்விகா, சூரி, பென்னி தயால், அசோக் செல்வன், சாந்தனு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சோனியா அகர்வால், பிரியங்கா நல்காரி, அமைரா தஸ்தூர், ஆனந்தராஜ், ஐஸ்வர்யா மேனன், காளிதாஸ் ஜெயராம், நகுல், ஷெரின், இயக்குநர் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன் என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அப்போலோ மருத்துவனைக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்டார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று எனது முதல் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். உங்களுடையதை எடுத்துக் கொண்டீர்களா? இந்த பயங்கரமான நோய் தொற்றுக்கு எதிரான சிறந்த பந்தயம் தடுப்பூசி தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Took my first jab of the #Covishield vaccine today. Have you taken yours? Remember, vaccines are our best bet against this dreadful pandemic! @HospitalsApollo @proyuvraaj pic.twitter.com/3NnsLGztgS
— aishwarya rajesh (@aishu_dil) June 1, 2021