Home Celebrities The Family Man 2: டூப்பே இல்லாமல் பைட் பண்ண சமந்தா: வைரலாகும் வீடியோ!

The Family Man 2: டூப்பே இல்லாமல் பைட் பண்ண சமந்தா: வைரலாகும் வீடியோ!

278
0

டூப் போடாமல் சண்டைக் காட்சியில் நடந்த சமந்தாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. மற்ற நடிகைகளைப் போன்று தற்போது வெப் தொடரில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள தி பேமிலி மேன் 2 வெப் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஈழப் போராட்ட த்தை கொச்சைப்படுத்தும் விதமாக தி பேமிலி மேன் 2 வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த தொடரை வெளியிட கூடாது என்று தமிழகத்தில் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தி பேமிலி மேன் வெப் தொடர் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த தொடருக்கு மேலும் புரோமோஷன் கொடுக்கும் வகையில், சமந்தா இந்த தொடரில் டூப் போடாமல் நடித்த சண்டைக் காட்சியின் வீடியோவை வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகிறார்.

இந்த வீடியோவைப் பார்த்த கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா, லாவண்யா திரிபாதி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் சமந்தாவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here