கப்பிங் தெரபி செய்து கொண்ட விஷ்ணு விஷாலின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, குள்ளநரி கூட்டம் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கவே வரிசையாக பல படங்களில் நடித்தார். அண்மையில், இவரது நடிப்பில் உருவாகியிருந்த காடன் படம் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்றது.
தற்போது ஆரண்யா, எஃப் ஐ ஆர், மோகன்தாஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.
இதையடுத்து, பேட்மிண்டன் வீராங்கனையான ஜூவாலா கட்டாவுடன் நெருங்கி பழகி வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கி இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த நிலையில், விஷ்ணு விஷால் கப்பிங் தெரபி செய்து கொள்ளும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆர்யா, விக்ரம், சூர்யா என்று பிரபலங்களைப் போன்று நடிகர் விஷ்ணு விஷாலும் தனது உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்,
உடற்பயிற்சியையும் தாண்டி சீன மருத்துவத்தில் விஷ்ணு விஷால் ஆர்வம் காட்டியுள்ளார். சீன மருத்துவ முறையான கப்பிங் தெரபி மேற்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடலில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதில் சீனாவின் பழமையான மருத்துவ முறையான கப்பிங் தெரபி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உடலில் இருக்கும் வலி மற்றும் தடை பிடிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு இந்த கப்பிங் தெரபி பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த அற்புதமான தெரபிக்கு நன்றி என்று விஷ்ணு விஷால் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram