சிம்பு நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்திலும் நடித்து வருகிறார்.
மாநாடு படத்தை வி ஹவுஸ் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் பட த்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், அரவிந்த் ஆகாஷ், டேனியல் அன்னே போப், ரவிகாந்த், ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் சிம்பு இந்தப் பட த்தில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாநாடு பட த்தின் சிம்பு நைட் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது.
தமிழ் மொழியில் உருவாகி வரும் மாநாடு படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், அண்மையில் முடிக்கப்பட்ட மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில், படக்குழுவினர் பலரும் மாஸ்க் அணிந்தபடி கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில், மாநாடு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.