மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கர்ணன்” படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி இன்று வெளியாகியுள்ளது.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில், கைவிலங்குடன் பின்னணில் மக்கள் கூட்டத்துடன் ரத்தக்கறை படிந்த முகத்துடன் தனுஷ் காட்சியளிக்கிறார். மற்றொரு போஸ்டரில் கையில் வாளுடன் உள்ளார்.
இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏப்ரல் 9-ம் தேதி கர்ணன் திரைப்படம் வெளியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜும் கர்ணன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “The Soul of Justice never dies” என்ற வாசகத்துடன் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளார்.