பழம்பெரும் நடிகர் ஜோக்கர் துளசி கொரோனா தொற்று காரணமாக காலமானார்.
கடந்த 1976 ஆம் ஆண்டு திரைக்கு வந்த உங்களில் ஒருத்தி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜோக்கர் துளசி. இந்தப் படத்தைத் தொடர்ந்து மன்மத லீலை, பட்டனத்து ராஜாக்கள், இது ஒரு தொடர் கதை, நம்ம ஊரு பூவாத்தா, நாங்கள் புதியவர்கள், உடன் பிறப்பு, நீ எந்தன் வானம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 45 வருடங்கள் சினிமாவில் காலூன்றியுள்ளார். வாணி ராணி, கோலங்கள், அழகு, கஸ்தூரி, மாதவி, கேளடி கண்மணி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக தந்துவிட்டேன் என்ன என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நாட்டையே உலுக்கி வரும் கொரொனாவின் 2ஆவது அலை காரணமாக சினிமா பிரபலங்கள் தாமிரா, கே வி ஆனந்த், டி கே எஸ் நடராஜன், பாண்டு ஆகியோர் பலரும் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது ஜோக்கர் துளசியும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். ஜோக்கர் துளசியின் மறைவுக்கு ராதிகா சரத்குமார் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.