Home Celebrities விஷால் படத்தில் இணைந்த டப்பிங் நடிகை!

விஷால் படத்தில் இணைந்த டப்பிங் நடிகை!

203
0

விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷால்31 படத்தில் டப்பிங் நடிகை ரவீனா ரவி இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் சக்ரா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷால், ஆர்யா, பிரகாஷ் ராஜ், மிருணாளினி ரவி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள எனிமி படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அரிமா நம்பி படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் அவரது 31ஆவது படமான விஷால்31 ஆவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

விஷால்31ஆவது படத்தை குறும்பட இயக்குநர் து.ப. சரவணன் இயக்குகிறார். இவர், விஷால்31 படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். குள்ளநரி கூட்டம் மற்றும் தேன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராகவும் து.ப.சரவணன் பணியாற்றியுள்ளார்.

ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஹீரோ, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துபவர்களை எதிர்த்து போராடும் கதையே மையப்படுத்தி விஷால்31 படம் உருவாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை டிம்பிள் ஹயட்டி நடிக்கிறார். இந்த நிலையில், டப்பிங் நடிகை ஒருவரும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சாட்டை படத்தில் மகிமா நம்பியாருக்கு டப்பிங் கொடுத்த ரவீனா ரவி இந்தப் படத்தில் நடிக்கிறார்.  இவர், ஒரு கிடாயின் கருணை மனு, காவல்துறை உங்கள் நண்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஏற்கனவே வரும் ஆகஷ்ட் மாதம் விஷால்31 படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்த து என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் மாதம் என்றால், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here