Home Celebrities முன்னாள் உலக செஸ் சாம்பியனுடன் செஸ் போட்டியில் மோதும் அமீர் கான்!

முன்னாள் உலக செஸ் சாம்பியனுடன் செஸ் போட்டியில் மோதும் அமீர் கான்!

212
0

கொரோனா நிதி திரட்டும் நோக்கத்தில் விஸ்வநாதன் ஆனந்துடன் பாலிவுட் நடிகர் அமீர் கான் செஸ் போட்டியில் விளையாட இருக்கிறார்.

கடந்த ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா முதல் அலையைத் தொடர்ந்து தற்போது கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதில், கே வி ஆனந்த், தாமிரா, சிந்துஜா, கோமகன் என்று ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகரிப்பதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதியுடன் லாக்டவுன் முடியும் நிலையில், மீண்டும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், கொரோனாவால் வாழ்வாதாரம், வேலையிழந்த மக்களுக்கு உதவும் வகையில் பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் என்று ஏராளமான அமைப்புகள் நிதியுதவி அளித்து வருகின்றன. அந்த வகையில், செஸ் விளையாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் செக்மேட் COVID என்ற போட்டியை நடத்த செஸ்.காம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போட்டி வரும் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடக்க இருக்கிறது. Chesscom India’s YouTube Channel என்ற சேனல் இந்தப் போட்டியை நேரடியாக லைவ் செய்கிறது. இந்தப் போட்டியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் மோத இருக்கின்றனர். இது குறித்து செஸ்.காம் என்ற டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைவரும் காத்திருக்கும் தருணம். சூப்பர் ஸ்டார் அமீர் கான் சதுரங்க விளையாட்டை விரும்புபவர். அவர் முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துடன் ஒரு போட்டியில் விளையாடுகிறார்.

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்துடன் அமீர் கான் செஸ் போட்டியில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here