விஜய் நடிப்பில் வந்த வேட்டைக்காரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகர் மணிமாறன் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்களான இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், இயக்குநர் தாமிரா, நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், டிகேஎஸ் நடராஜன் என்று பலரும் உயிரிழந்துள்ளனர்.
நந்திதா ஸ்வேதா, ஆண்ட்ரியா, அம்மு அபிராமி என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மேடை நாடக கலைஞரும், ஸ்டண்ட் கலைஞரும், தளபதி விஜய் நடிப்பில் வந்த வேட்டைக்காரன், விஷ்ணு விஷால் நடிப்பில் வந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கில்லி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகருமான மணிமாறன் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வந்த மணிமாறனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று வடிவேலுவின் கெணத்த காணோம் காமெடியில் வரும் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
Actor and Stunt Artist #ManiMaran has passed away today. Our deepest condolences to His Family pic.twitter.com/3YAdNQvnkQ
— Actor Vijay Universe ᵂᵉᵃʳ ᵃ ᴹᵃˢᵏ (@ActorVijayUniv) May 12, 2021