நடிகை அஞ்லிக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் புதிதாக தகவல் வெளியாகி வருகிறது.
கற்றது தமிழ் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அங்காடி தெரு படமே அஞ்லிக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு ரெட்டைச் சுழி, மகிழ்ச்சி, தூங்காநகரம், கோ, கருங்காலி, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, வத்திகுச்சி, சேட்டை, மாப்ள சிங்கம், இறைவி, தரமணி, பலூன், நாடோடிகள், சைலென்ஸ் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மொழியைத் தவிர தெலுங்கிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே நடிகர் ஜெய்யை காதலித்து வந்த நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில், அஞ்சலிக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், விரைவில் அவரது திருமணம் ஹைதராபாத்தில் நடக்க இருப்ப தாகவும் புதிதாக தகவல் வெளியாகி வருகிறது. அதோடு, திருமணத்திற்குப் பிறகு அவர் சினிமாவை விட்டு விலகவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அஞ்சலி எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.