Home Celebrities Arav Twitter: டுவிட்டரில் முதல் வீடியோ: தெரு நாய்க்கு பிஸ்கட் போடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர்...

Arav Twitter: டுவிட்டரில் முதல் வீடியோ: தெரு நாய்க்கு பிஸ்கட் போடும் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்!

123
0

டுவிட்டரில் இணைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ், உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அதிகளவில் பிரபலமானவர் நடிகர் ஆரவ். ஆனால், இந்நிகழ்ச்சியில் வருவதற்கு முன்னதாகவே ஓ காதல் கண்மணி என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. சைத்தான் படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓவியாவை காதலித்தார். இருவரும் மருத்துவ முத்தம் கொடுக்கும் அளவிற்கு நெங்கி பழகினர்.

இந்நிகழ்ச்சியின் மூலமாக ஆரவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் குவிந்தனர். பிக்பாஸ் மூலமாக சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்படி அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். இந்தப் பட த்தைத் தொடர்ந்து ராஜ பீமா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது மீண்டும் வா அருகில் வா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு கப் காஃபி என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார். தற்போது நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா முதல் அலையைவிட 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது.

என்னதான் மத்திய, மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகிறது. இனி வரும் வாரங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தைத் தொடும் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கன்வே வரும் 24 ஆம் தேதி லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்னும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதல் முறையாக டுவிட்டரில் இணைந்த நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு பிஸ்கட் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இந்த தொற்று மற்றும் லாக்டவுன் காலத்தில் தெரு நாய்களுக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில் தெரு நாய்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுப்பதை நாம் வாடிக்கையாக கொள்ள வேண்டும். எங்கள் தெருவில் நாய்களுக்கு உணவளிப்பதன் மூலம் இதை செய்ய ஆரம்பித்துள்ளேன். என்னால் முடிந்த உதவியை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here