Home Celebrities அப்பா, அம்மாவுக்கு கொரோனா: நாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டோம்: சாந்தணு!

அப்பா, அம்மாவுக்கு கொரோனா: நாங்கள் தனிமைப்படுத்திக் கொண்டோம்: சாந்தணு!

190
0

நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய வார்ப்புகள் படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாக்யராஜ். ஆனால், அதற்கு முன்னதாக 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இதே போன்று கிழக்கே போகும் ரயில் பட த்திலும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவ்வளவு ஏன், சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தின் வாயிலாக தன்னை ஒரு சிறந்த இயக்குநராக காட்டியவர் இயக்குநர் பாக்யராஜ். இவரது நடிப்பில் வந்த முந்தானை முடிச்சு படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது.

கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல படங்களை இயக்கவும் செய்துள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர். கடந்த 1984 ஆம் ஆண்டு நடிகை பூர்ணிமா பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். தற்போது நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா, கேப்ரில்லா, அம்மு அபிராமி, நந்திதா ஸ்வேதா, உமா ரியாஷ் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நடிகர் சாந்தணு டுவிட்டரில் கூறியிருப்பதாவது: எனது பெற்றோர் கே பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனையின்படி நாங்கள் உள்பட வீட்டில் உள்ள பணியாளர்கள் அனைவரும் எங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். கடந்த 10 நாட்களாக எங்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பெற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here