Home Celebrities முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட கழுகு பட நடிகை!

முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட கழுகு பட நடிகை!

165
0

கழுகு படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிந்து மாதவி தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை பிந்து மாதவி. பொக்கிஷம் படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், கழுகு படம் மூலம்ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார்.

தற்போது மாயன், யாருக்கும் அஞ்சேல், பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், நடிகை பிந்து மாதவியும் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, ரஜினிகாந்த், அருண் விஜய், சிம்ரன், சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரைசா வில்சன், கணேஷ் வெங்கட்ராமன், வேல்முருகன், சாந்தணு, நகுல், சாந்தினி தமிழரசன், ஜீவா, காஜல் அகர்வால், நிதி அகர்வால், சோனியா அகர்வால், சாக்‌ஷி அகர்வால், குக் வித் கோமாளி கனி, பவித்ரா லட்சுமி என்று ஏராளமான பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here