Home Celebrities கொரோனாவுக்கு பலியான பாலிவுட் நடிகை!

கொரோனாவுக்கு பலியான பாலிவுட் நடிகை!

199
0

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலிவுட் நடிகை அபிலாஷா பட்டீல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவின் 2ஆவது அலை தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு சினிமா பிரபலங்களான இயக்குநர், ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த், இயக்குநர் தாமிரா, நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், டிகேஎஸ் நடராஜன் என்று பலரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்களது வரிசையில் பாலிவுட் நடிகை அபிலாஷா பட்டீல் தற்போது இணைந்துள்ளார். சிச்சோரே, அக்‌ஷய் குமார் நடித்த குட் நியூஸ் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளார். அபிலாஷா பட்டீல் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here