Home Celebrities பல சிந்தனைகளை கடந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்: சாந்தினி தமிழரசன்!

பல சிந்தனைகளை கடந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டேன்: சாந்தினி தமிழரசன்!

155
0

பல சிந்தனைகளைக் கடந்து இன்று நான் எனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன் என்று நடிகை சாந்தினி தமிழரசன் கூறியுள்ளார்.

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட் சுபா என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவிலிருந்து தப்பிக்க, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த், பவித்ரா லட்சுமி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, வேல்முருகன், ரித்விகா, சூரி, பென்னி தயால், அசோக் செல்வன், சாந்தனு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சோனியா அகர்வால், பிரியங்கா நல்காரி, அமைரா தஸ்தூர், ஆனந்தராஜ், ஐஸ்வர்யா மேனன், காளிதாஸ் ஜெயராம், நகுல், ஷெரின், இயக்குநர் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ், கணேஷ் வெங்கட்ராமன் என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இவர்களது வரிசையில் தற்போது நடிகை சாந்தினி தமிழரசனும் இணைந்துள்ளார். இன்று தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பல சிந்தனைகளுக்குப் பிறகு நான் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்று முடிவு செய்தேன். அதன்படி இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். எளிதாகவும், வசதியாகவும் தடுப்பூசி செலுத்திய அப்போலோ மருத்துவமனைக்கு நன்றி. இதனை ஒன்றாக எதிர்த்துப் போராடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here