Home Celebrities Chiyaan60: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #CVFSaysBeVaccinated!

Chiyaan60: டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக் #CVFSaysBeVaccinated!

114
0

அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சியான் விக்ரம் ரசிகர்கள் #CVFSaysBeVaccinated என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சியான் விக்ரம். தற்போது பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம், சியான்60, கோப்ரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நாட்டையே உலுக்கி வரும் கொரோனா லாக்டவுன் காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஜினிகாந்த், மதுரை முத்து, பிக்பாஸ் ரைசா வில்சன், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ் ,சாந்ந்தனு, வேல்முருகன், சூரி, சாந்தினி தமிழரசன், சோனியா அகர்வால், நிதி அகர்வால், கணேஷ் வெங்கட்ராமன், ஆனந்தராஜ், சிம்ரன், அருண் விஜய் என்று பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சியான் விக்ரம் ரசிகர்கள் #CVFSaysBeVaccinated என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதன் மூலமாக அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக டுவிட்டரில், #CVFSaysBeVaccinated என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here