Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் நேத்து என்ற பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகவில்லை. இந்த ஆண்டும், கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் 18 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில், படத்தில் இடம்பெற்றுள்ள நேத்து பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், தனுஷ் ரொமான்ஸில் கலக்கும் வகையிலான இந்த பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, இந்தப் பாடலையும் தனுஷ் தனது குரலில் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி தனுஷ் நடித்த கர்ணன் படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு அமேசான் பிரைம் வீடியோவில் கர்ணன் படம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
We can’t wait to Spread some Love ❤️
Here is #Nethu from #JagameThandhiramEnjoy the #SuruliLovessu https://t.co/ZbPqM0TrEI@dhanushkraja @Music_Santhosh @AishwaryaLeksh4 @sash041075 @kshreyaas @vivekharshan @sherif_choreo @kunal_rajan @NetflixIndia @SonyMusicSouth @chakdyn
— karthik subbaraj (@karthiksubbaraj) May 22, 2021