Home Celebrities Jagame Thandhiram Music: நான் தாண்டா மாஸ், பரோட்டா மாஸ்டர், ஆள ஓல: ஜகமே தந்திரம்...

Jagame Thandhiram Music: நான் தாண்டா மாஸ், பரோட்டா மாஸ்டர், ஆள ஓல: ஜகமே தந்திரம் ஆல்பம் வெளியீடு!

333
0

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் ஆல்பம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள படம் ஜகமே தந்திரம். இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

கடந்தாண்டு மே மாதம் திரைக்கு வர இருந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியாகவில்லை. இந்த ஆண்டும், கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து லாக்டவுன் காரணமாக மூடப்பட்டு வரும் திரையரங்குகளால் பல படங்களில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்ட தோடு, மாஸ் படங்களின் வருகை ஓடிடி தளம் பக்கம் திரும்பியுள்ளது. அந்த வகையில், தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் வரும் 18 ஆம் தேதி ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், இந்தப் படத்தின் இடம் பெற்றுள்ள நேத்து பாடலின் வீடியோ வெளியாகி இருந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜகமே தந்திரம் படம் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதோடு, சுருளி கதாபாத்திரத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளதைத் தொடர்ந்து டிரைலர் வெளியான நிலையில், டுவிட்டரில் நிறுவனம் தனுஷின் சுருளி கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையில் எமோஜி வெளியிட்டது.

இந்த நிலையில், 7 ஆம் தேதி இசை வெளியாகும் என்று இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, ஜகமே தந்திரம் பட த்தில் மீதமுள்ள அனைத்து பாடல்கள் வெளியாகியுள்ளது. அதோடு, தீம் மியூசிக்கும் வெளியிடப்பட்டுள்ளது. தீம் மியூசிக் உள்பட ஜகமே தந்திரம் பட த்தில் ஒட்டு மொத்தமாக 11 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. நான் தாண்டா மாஸ், ஆள ஓல, பரோட்டா மாஸ்டர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here