கொரோனா லாக்டவுன் காரணமாக உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உதவும் வகையில் குக் வித் கோமாளி 2 பிரபலம் தர்ஷா குப்தா ஓடி ஓடி உதவி செய்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்நிகழ்ச்சியின் மூலமாக பவித்ரா லட்சுமிக்கு போட்டியாக புகழ் உடன் சேர்ந்து லூட்டி அடித்து வந்தார். குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியைத் தவிர, முள்ளும் மலரும், அவளும் நானும், மின்னலே ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். தற்போது செந்தூரப் பூவே என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார்.
மேலும், ருத்ரதாண்டவம் என்ற பட த்தின் மூலமாக ஹீரோயினாக அவதாரமும் எடுத்துள்ளார். விரைவில், இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உதவும் வகையில் தினமும் உணவு அளித்து வருகிறார்.
அதோடு, பசுமை இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக உதவி செய்து வருகிறார். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வருமானமின்றி தவிக்கும் மீனவ குடும்பத்தினருக்கு என்னால் முடிந்த உதவி செய்தேன். நீங்களும் இல்லாதவர்களுக்கு உதவுங்கள் உங்கள் சந்ததி வாழும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சாலை ஓரத்தில் உதவும் கரங்களை எதிர்ப்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் இவர்களுக்கு சுயமாக நாம் முன்வந்து உதவவில்லை என்றால்?.. வேறு யார் உதவுவார்கள்?… உதவுங்கள்…உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram