Home Celebrities நோயாளிகளுக்காகவே ஆசிரமம் திறந்த சண்டக்கோழி இயக்குநர்!

நோயாளிகளுக்காகவே ஆசிரமம் திறந்த சண்டக்கோழி இயக்குநர்!

218
0

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் மணப்பாக்கத்தில் ஆசிரமம் ஒன்றை இயக்குநர் லிங்குசாமி திறந்துள்ளார்.

நாட்டையே உலுக்கி வரும் கொரோனா காரணமாக தினம் தினம் எத்தனையோ உயிர்கள் பலியாகி வருகின்றன. அதோடு, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்களுக்கு உதவும் வகையில், பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமி ஒருபடி மேல் சென்று கொரோனா நோயாளிக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். மம்மூட்டி நடிப்பில் திரைக்கு வந்த ஆனந்தம் பட த்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதன் பிறகு ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ராம் பொத்தினேனி என்ற பட த்தை இயக்கி வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மணப்பாக்கத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். ஆசிரமம் திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here