இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.
கடந்த 1993 ஆம் ஆண்டு ஆக்ஷன் அர்ஜூன் நடிப்பில் திரைக்கு வந்த ஜென்டில்மேன் படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தவர் இயக்குநர் ஷங்கர். இந்தப் படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது. இப்படியொரு ஹிட் கொடுத்த கையோடு கமல் ஹாசன் நடிப்பில் வந்த இந்தியன் படத்தையும் கொடுத்தார். ஊழல், அரசியல் கதையை மையப்படுத்தி உருவான இந்தியன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
அதன் பிறகு வரிசையாக ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி, சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன், ஐ, 2.0 என்று மாஸ் படங்களை இயக்கி அந்தப் படங்களை ஹிட் கொடுக்கவும் செய்துள்ளார். வசந்த ராகம், சீதா, காதலன், இந்தியன், சிவாஜி தி பாஸ், எந்திரன், நண்பன் என்று பல படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.
ஒரு இயக்குநரோடு மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஹாலிவுட், டோலிவுட் இயக்குநர்களுக்கு இணையாக பிரமாண்ட இயக்குநராக உள்ளார். தற்போது கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். ஆனால், அதில், லைகா நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜென்டில்மேன், காதலன், அந்நியன் ஆகிய படங்களுக்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். இந்த நிலையில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் தாயார் முத்துலட்சுமி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. ஷங்கரின் தாயார் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
India’s ace director @shankarshanmugh sir’s mother aged 88 passed away today…RIP amma..stay strong #Shankar sir pic.twitter.com/r27cQFbTPn
— RCFAN-SK18 (@Rcfan_sk) May 18, 2021