விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி66 படத்தை தான் இயக்க இருப்பதாக தெலுங்கு இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது.
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி65 படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. பூஜா இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
பேட்ட படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் நவாசுதீன் சித்திக் தளபதி65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்று தெரிகிறது. அறிவுமணி மற்றும் அன்புமணி ஆகியோர் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுவதாக தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து, தளபதி66 படத்தை இயக்குவதில் லோகேஷ் கனகராஜ், அட்லி, ஹெச் வினோத், அஜய் ஞானமுத்து ஆகிய இயக்குநர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவியதாக கூறப்பட்ட து.
இந்த நிலையில், தற்போது தளபதி66 படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி66 பட த்தை தெலுங்கு பட இயக்குநர் வம்சி இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, தில் ராஜூ இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாக இருக்கும் தளபதி66 படம் அதிக பொருட்செலவில் உருவாக இருப்பதாக வம்சியே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, முன்னா, பிருந்தாவனம், ஏவடு, தோழா, மகரிஷி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
Dir @directorvamshi confirmed that his next movie is with Thalapathy @actorvijay in Dil Raju production & it is his careers biggest movie. Once the situations become normal they will announce the movie. #Thalapathy65#Master #Thalapathy66 pic.twitter.com/yLwjRjsIJW
— ℳ (@63dinesh64) May 30, 2021