தடுப்பூசி தான் வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் சிறந்த பாதுகாப்பு என்று பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் தாக்கம் காரணமாக எத்தனையோ பேர் உயிரிழந்துள்ளனர். இயக்குநர் கே வி ஆனந்த், தாமிரா, பாண்டு, கோமகன், அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா, வெங்கட் சுபா என்று சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க, 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஜினிகாந்த், பவித்ரா லட்சுமி, சிம்ரன், அருண் விஜய், மதுரை முத்து, வேல்முருகன், ரித்விகா, சூரி, பென்னி தயால், அசோக் செல்வன், சாந்தனு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சோனியா அகர்வால், பிரியங்கா நல்காரி, அமைரா தஸ்தூர், ஆனந்தராஜ், ஐஸ்வர்யா மேனன், காளிதாஸ் ஜெயராம், நகுல், ஷெரின், இயக்குநர் பாரதிராஜா, கல்யாணி பிரியதர்ஷன், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று ஏராளமான பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன் தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி தான் சிறந்த பாதுகாப்பு. உங்களுடையதையும் பெற்றுக்கொள்ளுங்கள் நண்பர்களே. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும், செயல்முறைகளையும் மென்மையாகவும், வசதியாகவும் செய்த தற்கு அப்போல்லோ மருத்துவமனைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
Vaccinated
Our best protection in the fight against the virus
Do get yours too friends ❤️❤️@apollospectra thanks for deligently following all d safety norms & making the process smooth & comfortable#covidshield#vaccinationdone✔️#ᴠᴀᴄᴄɪɴᴇssᴀᴠᴇʟɪᴠᴇs pic.twitter.com/R705DWNX2d— Ganesh Venkatram (@talk2ganesh) June 1, 2021