மஹா படப்பிடிப்பு நடந்து முடிந்த ஒரு வருடம் ஆன நிலையில், அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சாமி 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு, புலி, அரண்மனை 2, மனிதன், போகன், குலேபகாவலி, துப்பாக்கி முனை, 100 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சினிமா வாய்ப்பு இல்லாமல் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஹன்சிகாவின் 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் பட த்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போது அதில், சாமியார் உடையில், சுருட்டு பிடித்தபடி இருக்கும் போஸ்டர் இடம் பெற்றிருந்தது. அப்போது இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இவ்வளவு ஏன், மஹா படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து இயக்குநர் யு ஆர் ஜமீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மஹா பட த்தை இயக்குவதற்கு தனக்கு ரூ.24 லட்சம் வரையில் சம்பளம் பேசப்பட்டு ஒப்புக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் ரூ.8 லட்சம் வரையில் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளதாகவும், மீதமுள்ள சம்பளத்தை திருப்பி தர உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுனில் அதாவது மே 23 ஆம் தேதி மஹா பட த்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளையும் படக்குழுவினர் முடித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆன நிலையில், மஹா படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த கேக்கில் ஒரு முடிவில் தான் மற்றொன்றின் ஆரம்பம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் எழுதியிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஹன்சிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Actress @ihansika ‘s 50th movie #Maha completed shoot on Dec 23rd last year..
Actor @SilambarasanTR_ is playing an extended cameo in the film..@DoneChannel1 pic.twitter.com/r21R5656p9
— Ramesh Bala (@rameshlaus) May 23, 2021