Home Celebrities நண்பனை அறிமுகம் செய்த நடிகை பிகில் பட இந்துஜா!

நண்பனை அறிமுகம் செய்த நடிகை பிகில் பட இந்துஜா!

275
0

நண்பன் மிஸ்டர் டைமண்டை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலமாக பிகில் பட நடிகை இந்துஜா அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

மேயாத மான் பட த்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. தொடர்ந்து மெர்குறி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங்,  மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன் என்று பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், பிகில் படமே அவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்தது. தற்போது காக்கி பட த்தில் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா தனது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாத நிலையில், பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கின்றனர். அதோடு, வீட்டில் இருக்கும் தங்களது செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், இந்துஜா தனது டுவிட்டர் பக்கத்தில் எனது நண்பன் மிஸ்டர் டைமண்டை சந்திக்கவும் என்று கூறி குதிரையுடன் இருக்கும் புகைப்பட த்தை பதிவிட்டுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், இந்துஜாவும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here