நடிகை ஐஸ்வர்யா மேனன் தடுப்பூசி போட்டு ஒரு வாரம் ஆன நிலையில், தற்போது தான் தடுப்பூசி போட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யனும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நாட்டையே உலுக்கி வரும் கொரோனா 2ஆவது அலையின் காரணமாக பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். அதோடு, மக்களிடையே தடுப்பூசி போடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா மேனன், தனது முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டதாக கடந்த 23 ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்பட த்தை பதிவிடுவதற்கு மறந்துவிட்டார். ஆனால், வீடியோ வெளியிட்டு தடுப்பூசி போடுவதற்கு என்ன செய்ய வேண்டும். அது எங்கெல்லாம் கிடைக்கிறது என்பதற்கான வழிமுறைகளை தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
முதலில் ஆரோக்கிய சேது ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு டுவிட்டரில், வேக்சின் அப்டேட்டர்னு டைப் செய்ய வேண்டும். அதில் எந்த ஏரியாவுல இருக்கிறீர்களோ, அந்த ஏரியா கிளிக் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு சென்னையில் இருந்தால் சென்னை வேக்சின் அப்டேட்டர் கிளிக் செய்ய வேண்டும். சென்னையில், எந்தெந்த ஏரியாவில் எத்தனை பின் கோடு இருக்கிறது, எவ்வளவு வேக்சின் இருக்கு, எந்த ஹாஸ்பிடல்ல வேக்சின் இருக்கு, அந்த வேக்சின் பெயருடன் உடனடியாக அப்டேட் வந்து கொண்டே இருக்கும்.
நோட்டிபிகேஷன் வரும் போது, உடனடியாக ஆரோக்கிய சேது ஆப்பிற்கு சென்று அனைத்து தகவல்களையும் சரியாக டைப் செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்புறம் என்ன தடுப்பூசி தான். வெளியில் செல்லும் போது மாஸ்க் போடுங்கள், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்களும் போட்டுக் கொள்ளுங்கள் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்பட த்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாமதமான பதிவு. தடுப்பூசி எடுத்துக் கொள்ளவா வேண்டாமா என்பதில் ஒரே குழப்பமாக இருந்தேன். கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன செய்ய வேறு வழியில்லாமல், தடுப்பூசி போட்டுக் கொண்டேன். தயவு செய்து நீங்களும், உங்களைச் சார்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
#latepost#firstdosedone
.
I got my first dose of vaccine done.
I was blank&confused wthr to take it or not.Since our country is going through a major turmoil with the second wave,there was no option left
Kindly get yourself & your loved ones vaccinated ASAP. Love & light ⭐️ pic.twitter.com/EcpBUareUg— Iswarya Menon (@Ishmenon) May 29, 2021