வரும் 22 ஆம் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தற்போதே ஜூன்22 தமிழன் திருவிழா என்ற ஹேஷ்டேக்குடன் தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு மாஸ் நடிகருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்று பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டங்களில் இருந்து நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது உள்ள தொழில்நுட்ப காலகட்டத்தில் யாருடைய நடிகர் உயர்ந்தவர், பெரியவர், சிறியவர் என்பதில், ரசிகர்களுக்கு இடையில் கடும் போட்டி, வாக்குவாதம் நடந்து வருகிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையில் சமூக வலைதளங்களில் கடும் போட்டி நிலவுகிறது. கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விஜய் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா காரணமாக இரவு, பகலாக தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் ஆகியோருக்கு புதுக்கோட்டை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் தங்க நாணயம் பரிசாக வழங்கினர்.
வரும் 22 ஆம் தேதி தளபதி விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இன்னும் 15 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் இப்போதே விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். அதற்காக டுவிட்டரில், #ஜூன்22தமிழன்திருவிழா என்ற ஹேஷ்டேக்கை இன்று உருவாக்கி அதில் விஜய்யின் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது விஜய், தளபதி65 பட த்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த து. இதைத் தொடர்ந்து சென்னையில் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நடக்க இருந்த து. ஆனால், கொரோனா காரணமாக அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், விஜய்யின் தளபதி65 படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சரியான பிறகு மீண்டும் தளபதி65 பட த்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#ஜூன்22தமிழன்திருவிழா tag still Trending with 25K Tweets #Master @actorvijay pic.twitter.com/uIkUa9vFJL
— Trends & Tweets Count (@Trends_Count) June 7, 2021