Home Celebrities Dhanush: அமேசான் பிரைமில் கர்ணன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Dhanush: அமேசான் பிரைமில் கர்ணன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

324
0

தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த கர்ணன் படம் அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பல அவதாரங்களை எடுத்துள்ளார். அண்மையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்திருந்த கர்ணன் படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கர்ணனுக்கு நல்ல வரவேற்பு.

தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த சாதனையை கர்ணன் நிகழ்த்தியது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வந்த நிலையில், நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜகமே தந்திரம் படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்ணன் படமும் தற்போது ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியாகிறது. இது தொடர்பாக அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வரும் 14 ஆம் தேதி பிரைமில் கர்ணனை சந்திக்கலாம் என்று பதிவிட்டுள்ளது.

இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதன் மூலம் அடுத்தடுத்து தனுஷ் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here